சென்னை அணியில் இணையும் புதிய வேகப்பந்து வீச்சாளர்
ஐபிஎல் 16வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் துடுப்பாட்டம் பலமாக காணப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் பாரிய பிரச்சனையாக இருப்பது வேகப் பந்துவீச்சு தான்.
அணிக்குள் உள்வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியதால் அணியின் பந்துவீச்சு சிக்கல் நிலையில் காணப்படுகிறது.
சிசான்தா மகாலா
இதனை தீர்க்க வேண்டும் என்றால் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் வருவதுதான் ஒரே வழி என்று துடுப்பாட்ட போட்டி விமர்சகர்களும் கருத்துக்கூறி வந்தனர்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் சிசாண்டா மகாலா இந்தியா திரும்பி உள்ளார். சென்னை அணிக்கு உள்வாங்கப்பட்ட இவர் ஒரு சகலதுறை வீரராக காணப்படுகிறார்.
இறுதியாக விளையாடிய நான்கு சர்வதேச போட்டிகளில் சிசான்தா மகாலா 11 ஆட்டமிழப்புகளை கைப்பற்றி கைப்பற்றியுள்ளார்.
நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரிலும் அதிக ஆட்டமிழப்புகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
சென்னை மும்பை
இதனால் வரும் சனிக்கிழமை மும்பையில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மகாலா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 10 போட்டி இன்றய தினம் இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டியில் லக்னோ அணியும் சன்ரைசஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேலும், சென்னை அணிக்கான அடுத்த போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், நாளைய போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
