ஐபிஎல் 2024: சிஸ்கே- ஆர்சிபி போட்டிகள் இன்று..!
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஐபிஎல் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு 2024 சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
2 மாதங்கள் தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்த போட்டிகளில் உலகின் சிறந்த நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள 10 அணிகள், இம்முறை ஐபிஎல் கோப்பைக்காக மோதுகின்றன.
ஐபிஎல் 2024
நட்சத்திர வீரர்கள் பலரும் தங்களது முக்கிய பதவிகளிலிருந்து விலகியுள்ளதால் இவ் வருட போட்டிக்கான எதிர்ப்பார்புகள் அதிகரித்துள்ளன.
தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்ற காரணத்தினால் சிஸ்கே அணி கோப்பையை வெல்லுமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் ஐபிஎல் தொடர் ஆரம்பமானதிலிருந்தே ஒருமுறை கூட ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை.
பெங்களூர் அணி வீராங்கனைகள் மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்று விட்டதால் ஆண்கள் அணிக்கும் அதிகமான அழுத்தம் உள்ளது.
சிஸ்கே
இந்நிலையில் கோலாகலமான தொடக்க விழாவுடன் இன்றைய போட்டி தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்தாண்டு குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழா போட்டியில் அர்ஜித் சிங், ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டீயா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடகர் சோனு நிகம் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்று இசை நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடக்க விழா
தொடக்க விழா அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆரம்பமாகவுள்ளதுடன் மற்ற போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.
நாணயசுழற்சி 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், முதல் போட்டி மட்டும் அரைமணி நேரம் தாமதமாக 7.30 மணிக்கு நாணயசுழற்சி நடைபெற்று இரவு 8 மணிக்கு துடுப்பாட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |