நாடளாவிய ரீதியில் நீக்கப்பட்டது ஊரடங்கு! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிமுதல் நீக்கப்பட்டுள்ளது.
கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க சிறிலங்கா அரச அதிபர், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயல்பாட்டு மையம் மற்றும் மருத்துவர்கள் தீர்மானித்துள்ளார்கள்.
இலங்கையில் கொரோனா அலையால் தினமும் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், சுமார் 200க்கு மேற்பட்ட மரணங்களும் பதிவாகி வந்தன.
இதை கட்டுப்படுத்த பல தரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடு முடக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் ஒன்றரை மாதங்களின் பின் நாடு இன்று திறக்கப்படுகின்றது.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டிருந்தன.
புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது
உற்சவங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை பதிவு திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மாத்திரமே கலந்துக்கொள்ள முடியும்.
16ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையான திருமண நிகழ்வுகளுக்கு 50 பேருக்கு அனுமதி.
பொது போக்குவரத்து சேவைகள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் பஸ்களில் ஜன்னல்கள் திறந்து பயணிப்பது அவசியமானது
குளிரூட்டப்பட்ட பஸ் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் முகக் கவசங்களை உரிய வகையில் அணிதல் கட்டாயமானது
சிகை அலங்கார நிலையங்களுக்கு (சலூன்) பிரவேசிக்கும் போது, நேரத்தை ஒதுக்கி, அங்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை உரிய சுகாதார வழிமுறைகளுக்கு அமைய திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடைகள், அங்காடிகளில் 10% அளவிலேயே சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஒருவரின் மரணத்திற்கு குறைந்தது 10 பேருக்கு மட்டுமே அனுமதி.