கையடக்கத் தொலைபேசியை திருடிய வாடிக்கையாளர் - கண்கானிப்பு கருவியில் பதிவு
கண்டி நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி கடையொன்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 64000/= பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் திருடியுள்ளார்.
குறித்த திருட்டு சம்பவம் கடையின் பொருத்தப்பட்டிந்த பாதுகாப்பு கண்கானிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
நேற்று காலை (13) காலை 09.15 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருட்டு

கடையில் விற்பனை செய்யவிருந்த தொலைபேசி காணாமல் போனதை அறிந்ததும் கடையின் உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்கானிப்பு கருவியின் பதிவினை சரிபார்த்ததில் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கையடக்கத் தொலைபேசியை திருடிய நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கண்டி காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கையடக்கத் தொலைபேசி கடையின் உரிமையாளர் மற்றும் கண்டி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.