ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்
ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், பிரித்தானியா (United Kingdom) மற்றும் ஜெர்மனி (Germany) உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் மூன்றாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான தொழில்நுட்ப சேவையை காலின்ஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் வழங்கி வருகின்றது.
சைபர் தாக்குதல்
இதனை குறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா, லண்டனில் உள்ள ஹீத்ரோ மற்றும் பெர்லினின் பிரஸ்ஸல்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான நிலையங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பயணியர் விமான நிலையத்தை கடந்து உள்ளே அனுப்பப்படும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமானங்கள்
இந்தநிலையில் மூன்றாவது நாளாக இன்றும் விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்படவிருந்த 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
