டெல்லி குண்டால் எச்சரிக்கையில் பாக்குநீரிணை! 358 Kg வெடிபொருள் திகில் மருத்துவர்கள்
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவுத் இப்ராஹிம்மின் டி சின்டிகேற்றுக்கும் புலிகளுக்கும் இடையிலான கதைகள் எல்லாம் கடந்த ஒரிருநாட்களாக இந்திய புலனாய்வுகளில் அடிபட்டிருந்தன.
இந்த நிலையில் 2008 இல் மும்பை நகரின் முக்கிய இடங்களில் 3 நாட்களாக நடத்தப்பட்ட திகிலான பல தாக்குதல்களில் 175 பேருக்குமேல் கொல்லபட்ட பின்னர் அதே நவம்பர் மாதத்தில் நேற்று டெல்லியில் ஒரு குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து தாவூத்தின் டி சின்டிகேட்டின் புதிய வழியென ஐயப்படும் இலங்கையை அண்டிய பாக்குநீரிணையிலும் இந்திய பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்கு அருகில் பரிதாபாத் நகரத்தில் அண்மையில்;; 358 கிலோ அமோனியம் நைட்ரேட் உட்பட சுமார் 2,900 கிலோ வெடிப்பு பொருட்கள் மற்றுசாதனங்கள் மீட்கப்பட்ட அறிவிகப்பட்ட பின்னர் இந்த வெடிப்பு இடம்பெற்றது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் புல்வாமா மற்றும் காசிகுண்ட் பகுதிகளில் வசிக்கும் இரண்டு மருத்துவர்கள் உள்பட்டவர்கள் கைதான நிலையில் இன்னொருவராக உமர் முகமது தான் வெடிப்புக்கு உள்ளான வாகனத்தில் பயணித்த நிலையில் திகில் மற்றும் பரபரப்பு நிறைந்த இந்த பின்னணி குறித்து தொட்டுச்செல்கிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |