அதிகரித்தது மின்தேவை : குறைந்துள்ள நீர் மின் உற்பத்தி
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாளாந்த மின்சார தேவை 4 முதல் 6 கிகாவாட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் ஒரு வார நாளில் நாளாந்த மின்சாரத் தேவை சுமார் 40 ஜிகாவட் மணிநேரமாக இருந்த நிலையில் அது தற்போது 46 ஜிகாவட் மணிநேரமாக அதிகரித்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
மின் விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளின் பாவனை
வெப்பமான காலநிலையினால் மின் விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்த நிலை ஏற்பட காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைவடைந்த நீர் மின் உற்பத்தி
இதேவேளை, இந்நாட்களில் நீர் மின் உற்பத்தி 20 தொடக்கம் 21 வீதம் வரை குறைந்துள்ளதாக நோயல் பிரியந்த தெரிவித்தார்.
தற்போது நீர் மின் நிலையங்கள் தொடர்பான நீர் கொள்ளளவு 83 சதவீதமாக உள்ளது என்றார்.
இதன் காரணமாக இன்றைய நாட்களில் அனல் மின் நிலையங்கள் ஊடாக 64 வீதமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |