விசமிகளால் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் விளம்பரப் பெயர்ப்பலகை சேதம்
வவுனியா புதிய கற்பகபுரம் வீதியை கார்பட் வீதியாக அமைத்த ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் விளம்பரப் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் பம்பைமடு இணைப்பாளர் நேற்று இரவு விளம்பரப் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி புதிய கற்பகபுரம் வீதி கார்பட் வீதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே . காதர் மஸ்தானின் (K . Kather Mastan) அபிவிருத்தி நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களின் பின்னர் நேற்று அவ்வீதியில் அமைக்கப்பட்ட விளம்பரப் பெயர்ப்பலகை விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதோடு நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் கிளித்தெறியப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களுடன் அப்பகுதியிலுள்ள சிலர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் திருமதி மில்டன் ரமேஸ் ஜெயமாதுரி (Milton Rames Jayamathuri) தெரிவித்துள்ளார்.
எனினும் முறைப்பாட்டிற்கான மூலப் பிரதி முறைப்பாடு மேற்கொண்டவருக்கு வழங்கப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


