பாரிய ஆபத்தை தடுத்த இரண்டு இளைஞர்கள்: குவியும் பாராட்டுகள்
கரையோர தொடருந்து சேவையின் வஸ்கடுவ பகுதியில் இன்று (23) தொடருந்து பாதையில் ஏற்பட்ட வெடிப்பை குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கண்டுபிடித்து உரிய இடத்திற்கு அறிவித்ததை அடுத்து நிகழவிருந்த பெரும் ஆபத்து தடுக்கப்பட்டதாக வடுவ தொடருந்து பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறையில் (kalutara) இருந்து கொழும்புக்கு (colombo) செல்லும் மேல் பாதையின் 25 ஆவது மைல் மற்றும் 20 ஆம் சங்கிலி இணைப்பில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை வஸ்கடுவ பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பார்த்துள்ளனர்.
உடனடியாக திருத்தவேலை
இதன்படி, வாத்துவ நிலைய பொறுப்பதிகாரி யு.ஐ.பி.ருட்ரிக்கு அறிவித்ததை அடுத்து அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரதான தொடருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்ததுடன், வாத்துவ வீதிப் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இயந்திரங்களுடன் உடனடியாக அவ்விடத்திற்கு அனுப்பி, திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.
புனரமைப்பின் போது கடலோர வழி ஊடான தொடருந்து சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரு இளைஞர்களால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து
இரு இளைஞர்களின் விழிப்புணர்வினாலும், வாத்துவ நிலைய அதிபர் யுஐபி ரொட்ரிகுவின் உடனடி நடவடிக்கையினாலும் ஏற்படக்கூடிய பாரிய தொடருந்து விபத்து தவிர்க்கப்பட்டதாக தொடருந்து பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த இரண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு செயற்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |