உங்களுக்கு கருவளையம் இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனே நீங்கிவிடும்
கண்களுக்குக் கீழே கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று.
பெண்கள் ஆண்கள் என இருபாலருக்குமே கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றுகிறது.
மேலும் முக அழகை பராமரிக்க முயற்சி செய்யும் நாம், கருவளையத்தை கண்டுகொள்ளாமல் விடும் போது இது முக அழகையே கெடுத்து விடுகிறது.
கருவளையம் ஏற்படுவதற்கான காரணம்
கருவளையத்தை நீக்குவதற்காக நாம் பயன்படுத்தும் இரசாயன க்ரீம்கள் கண்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.
முகத்தில் கண்களுக்கு கீழ் இருக்கும் சதை பகுதி மிகவும் மென்மையானது.
இதனால், இருட்டில் தொலைபேசி பயன்படுத்துவது, தொலைக்காட்சி அருகில் அமர்ந்து பார்ப்பது, இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, ஊட்டசத்து குறைபாடு, அதிக மன அழுத்தம், அதிகமான ஒப்பனைகள் போன்றவற்றால் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் ஏற்படலாம்.
கருவளையத்தை எவ்வாறு நீக்கலாம்
எனவே, இயற்கையாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எவ்வாறு கருவளையங்களை எளிதில் நீக்கலாம் என பார்க்கலாம்.
விளக்கெண்ணெய், கற்றாழை , காபி தூள் இவற்றை வைத்து எளிதில் கருவளையங்களை நீக்கலாம் . இவை மூன்றையும் சேர்த்து நன்றாக க்ரீம்பதத்துக்கு கலக்க வேண்டும்.
கலக்கிய பின் வரம் க்ரீம்மை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு கீழ் தடவி தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு கீழ் தடவி கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு செய்து வர சிறந்த பலன் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்