முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு: இதை மட்டும் செய்தால் போதும்..!
ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே தங்களது முகத்தைப் பளபளப்பாகப் பேணிகாக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
முகத்தில் முகப்பரு வந்துவிட்டால் முக அழகே கெட்டுவிடும்.
முகப்பரு வருவதற்கு உடல் சூடு, உண்ணும் உணவு, சூழல் என பல காரணங்கள் உண்டு.
முகப்பரு ஏற்படுவதற்கான காரணம்
கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில் முகப்பரு ஏற்படும். முகப்பரு மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன.
இதற்காக நாம் பயன்படுத்தும் இரசாயனம் கலந்த க்ரீம்கள், திரவங்கள் மேலும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
இதற்கான தீர்வுதான் என்ன என பார்க்கலாம்.
முகப்பருவிற்கான தீர்வு
எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.
இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். மேலும், பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |