கண்ணை சுற்றி கருவளையமா! இதை மட்டும் செய்யுங்கள் உடனே நீங்கிவிடும்
நம்மில் பலருக்கு அழகு பற்றிய கவலை அதிகமாவே இருக்கிறது. அதிலும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.
என்னதான் முகம் அழகாக இருந்தாலும் கருவளையம் ஏற்பட்டால் அந்த அழகே போய்விடும். கருவளையம் வருவதற்கு சரியான நேரத்தில் தூங்காதது, தொலைபேசி மற்றும், கணனியை அதிகமாக பார்ப்பது, போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றது.
எனவே இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லதாகும். அந்தவகையில் தற்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.
கருவளையம் நீங்க வேண்டுமா
உருளைக்கிழங்கு, பாதம் பொடி,கற்றாழை இவற்றை வைத்து கருவளையத்தை நீக்கலாம். உருளைக்கிழங்கை தோல் சீவி நன்கு துருவி கொள்ளவும்.
பின்னர் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றுடன் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலவையாக்கலாம்.
தினமும் இரவில் முகத்தை கழுவிவிட்டு கருவளையம் உள்ள இடத்தில் பூசவும். மறுநாள் காலையில் முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர சிறந்த பலனை அடையலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |