கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்
Skin Care
National Health Service
Beauty
By Thulsi
பொதுவாக நமது முகம் நன்கு பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஆசைப்படுவார்கள்.
அப்படி நமது முகமும் நன்கு பொலிவு பெறவேண்டும் என்று ஆசைப்படும் நபர்களுக்காக தான் இன்றைய பதிவு.
தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும். இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.
வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்
இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- முதலில் கழுவிய அரிசியை எடுத்து சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு அதை 2-3 மணி நே ரம் வரை ஊறவைத்துக் கொள்ளுங்கள் ஊறவைத்த அரிசி தண்ணீரை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து அதை ஒரு போத்தலில் ஸ்பிரேய் பண்ணும் விதத்தில் மூடி வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
கஸ்தூரி, மஞ்சள், சந்தனம்
- ஒரு சுத்தமான பாத்திரத்தில் பசும்பாலை எடுத்து கொள்ளவும். முகத்தை கழுவிய பின் ஒரு காட்டன் பஞ்சை எடுத்து பாலில் தோய்த்து சிறிய அழுத்தம் கொடுத்து பூசிக் கொள்ளவும். இக்கலவையை நன்றாக காயவையத்த பின்பு சுடுதண்ணரீல் முகத்தை கழுவுங்கள்.
- கஸ்தூரி மஞ்சள், சந்தனம் காய்ச்சாத பால் செய்முறை ஒரு கிண்ணத்தில் இந்த மூன்றையும் ஒன்றாக குழைத்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள் பின் அதை முகத்தில் அப்ளை செய்யவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்