ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்
அமெரிக்கா ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோரியிருந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் தற்போது இழப்பீடு கோருவதாகவும் ஆனால் இதற்கு முந்தைய எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலோ அல்லது கூட்டங்களிலோ ஈரான் இதனைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெடிகுண்டுகள்
ஈரானின் சாலைப்பக்க வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு மோதல்களால் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைத்து நபர்களுக்காகவும், குறிப்பாக யூ.எஸ்.எஸ் கோல் (USS Cole) தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்காகவும் ஈரானிடம் இருந்து தானும் இழப்பீடு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 50 ஆண்டுகளில் ஈரானில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ட்ரம்ப், எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்தக் கோரிக்கையைச் சேர்க்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |