IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் உச்சத் தலைவரும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான மொஜ்தாபா ஹொசைனி காமேனி இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹியும், அவரது துணைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் கியூமர்ஸ் ஹைதரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புரட்சிகர காவல் படை
அதேபோல, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அஹ்மத் வாஹிதி இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியாகவும், மொஸ்டாஃபா இசாதி அதன் துணைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் அலி ஒஸ்மையும், பசீஜ் அமைப்பின் தலைவராக ஹொசைன் தாயெப்பும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |