இருளில் மூழ்கியுள்ள தென்னிலங்கை - மண் சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
People
South SriLanka
Power Cut
Landslide Warning
Western Provencial
By Chanakyan
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அதன்படி தென் மாகாணம் முழுவதும் தடை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தின் பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெகிவளை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளிலேயே தடை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவானதுடன், காலநிலையும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.
மலைப்பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.