இருளில் மூழ்கியுள்ள கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை: வெளிவந்த தகவல்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகள் மின்கம்பங்களின் மின்குமிழ்கள் இயங்காததால் இருளில் மூழ்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.
மின்சார கேபிள்கள் அறுந்துள்ளமை மற்றும் நிலத்தடி கேபிள்கள் திருடப்பட்டுள்ளமையினால் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மின்சார கேபிள்கள்
இந்நிலையில் நெடுஞ்சாலையின் மின்சார கேபிள்கள் திருடப்படுவது இது முதல் முறையல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் அகற்றப்பட்டதால் 286 மில்லியன் ருபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெடிகந்த பிரதேசத்தில் கோடரியை பயன்படுத்தி நான்கு விளக்கு கம்பங்கள் திருடப்படடிருந்த நிலையில் இதனால் 2.4 மில்லியன் ருபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |