கெஹலியவின் பிணை மனு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Keheliya Rambukwella
Supreme Court of Sri Lanka
By Laksi
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி கூடி ஆராய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (22)கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு தொடர்பான ஆவணங்கள்
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இந்த மனு தொடர்பான ஆவணங்கள் தமக்கு கிடைக்கவில்லை என நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், உரிய ஆவணங்களை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்குமாறு மனுதாரருக்கு அறிவித்த நீதிபதி, மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை பரிசீலனைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி