தனது தாயை அடித்தே கொன்ற மகள்
தாயை அடித்தே கொன்ற மகள்
பொரளை, பேஸ்லைன் மாவத்தை, சிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மொஹமட் ஜஸ்மின் என்ற வயோதிப தாயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் 38 வயதுடைய மகளும், அவரை தாக்க பயன்படுத்திய மூன்றடி உயரமுள்ள உலக்கையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு வயது மகளை தாக்கிய தாய்
சந்தேக நபரும் கொலை செய்யப்பட்ட தாயும் ஒரே வீட்டில் வசித்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் ஆறு வயது மகளை தாய் தாக்கியதாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன.ர்
சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியவர் என விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.