கோர விபத்து - கர்ப்பிணித் தாயும் கணவரும் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Sumithiran
வீதியில் நடந்து சென்றபோது நிகழ்ந்த அனர்த்தம்
இன்று மாலை புத்தள - வெல்லவாய வீதியில் புத்தல புருத சந்தியில் வேகமாக வந்த வான் மோதியதில் 32 வயதான கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 37 வயது கணவரும் வீதியோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது வான் அவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் புத்தல குடாஓயாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள்.
சாரதி தப்பியோட்டம்
விபத்தை அடுத்து வானின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும், பின்னர் அவர் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவரின் இடது கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக் காலுடன் வாழ்ந்து வருவது தெரியவந்தது.
மரண அறிவித்தல்