கோட்டாபய அரசுக்கு எதிராக மைத்திரி தரப்பு களமிறங்குகிறதா?

Srilanka Freedom Party Gotabhaya Rajapaksa Dayasiri Jayasekara
By Vasanth Dec 28, 2020 02:33 AM GMT
Report

சில அபிவிருத்தி திட்டங்களில் கீழ் மட்டத்திலும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகின்றமை அதிருப்தியளிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து கொண்டு அதற்கெதிராகவே சிலர் சூழ்ச்சிகளை செய்வதாகவும் , 2015 இல் தேசிய அரசாங்கத்தில் இணைந்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திர கட்சி செயற்பட்டமை மறக்கக் கூடிய விடயமல்ல என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், நாம் பிரிதொருவர் மீது விரல் நீட்டி குற்றஞ்சுமத்தும் போது ஏனைய விரல்கள் குற்றஞ்சுமத்துபவரை நோக்கியே காணப்படும். சுதந்திர கட்சி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களும் இவ்வாறானவர்களே.

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமை கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் போது அவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று பலரும் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் அரசாங்கத்தின் வெற்றிக்காக சுதந்திர கட்சி பாடுபட்டிருக்கிறது.

எனினும் தற்போது கீழ் மட்டத்திலுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது அதிருப்தியளிக்கிறது. இது குறித்து நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

உரியவர்களிடமும் தெரிவித்திருக்கின்றோம். எனவே தான் இது போன்ற அநாவசியமானதும் போலியானதுமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் நாம் அவ்வாறு செயற்படுவதில்லை. நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி