முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார் - தயாசிறி ஜயசேகர பகிரங்க அறிவிப்பு
election
cm
dayasiri jayasekara
slfp
By Vanan
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டால் மீண்டும் ஒருதடவை வட மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர( dayasiri jayasekara) தெரிவித்துள்ளார்.
தற்போதும் இதுசார்ந்த பல கோரிக்கை தமக்கு முன்பாக கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தவொரு முறையும் வடமேல் மாகாண முதலமைச்சராக பதவிவகித்ததோடு அந்த மாகாண மக்களுக்கு அப்பதவியில் இருந்துகொண்டு பல்வேறு சேவைகளை செய்யமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தயாசிறி ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் தான் கடந்த முறை எம்.பி பதவியை இராஜினாமா செய்துவிட்டு வடமேல் மாகாண முதலமைச்சராக போட்டியிட்டுத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 22 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி