தமிழர் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு!
Mannar
Nothern Province
Crime
Srilankan Tamil News
By Kathirpriya
2 years ago
மன்னார் சிலாவத்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் (29) குறித்த உடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை பார்வையிடுகையில் உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
உடலம் சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் குறித்த சடலம் காணப்படுகிறது.
கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த உடலை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை காவல்துறையினருக்கு மீனவர்களால் தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாவத்துறை காவல்துறையினரால் சடலம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி