இறந்த நிலையில் கரை ஒதுங்கும் கடலாமைகள்
Colombo
Sri Lanka
By Sumithiran
இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கடலாமைகள் ஒதுங்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
இதன்படி நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு கடலாமைகள் ஒதுங்கியுள்ளன.
17 கடலாமைகள்

வெள்ளவத்தை தொடக்கம் காலி முகத்துவாரம் வரையான நாட்டின் மேற்கு கடற்பரப்பில் கடந்த சில நாட்களுக்குள் 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரை ஒதுங்கிய இந்த ஆமைகளில் சிலவற்றின் கண்கள் வீங்கி, சில உடல்களில் இருந்து இரத்தம் வழிந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
8 கடலாமைகள் மீதான பிரேத பரிசோதனைகள் நேற்று (24) இடம்பெற்றதுடன், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.