கருவிலிருந்த சிசுவும் கொரோனாவால் உயிரிழப்பு -இலங்கையில் துயர சம்பவம்
srilanka
corona
death
fetal
By Sumithiran
இலங்கையில் கர்ப்பிணிப் பெண் ஒருவரது வயிற்றிலிருந்த 09 மாத சிசுவும் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலி – மஹமோதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 09 மாத கர்ப்பிணிப் பெண்ணின் சிசுவே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளது. ஏற்கனவே தாய்க்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு பின் பூரண குணடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.
இதனையடுத்து மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் சிசு உயிரிழந்துவிட்டதாகவும், சிசுவுக்கும் தொற்று உறுதியாகியிருந்ததையும் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்