இலங்கையில் கொவிட் பலி 591 ஆக அதிகரிப்பு
srilanka
death
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளது.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும், தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்