ஒடுக்கப்பட்ட தமிழர்களின் அடையாளம் மௌனித்தது! யாழ். மாநகர முதல்வர்

srilanka jaffna death
By Vasanth Apr 03, 2021 08:58 AM GMT
Report

“ஒடுக்கப்பட்ட தமிழர்களின் அடையாளமே” மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை என யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன்.

அவரது மரணம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பேரிழப்பாகும். அண்மைக் காலமாக அவர் சுகவீனடைந்திருந்த செய்தி அறிந்த போதும் அவர் தேறி வருவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. தமிழ் மக்களுடைய அரசியல் போராட்ட வரலாற்றில் கத்தோலிக்க மத குருமார்கள் பலர் பாரிய பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர்.

அந்த வரிசையில் மிக முக்கியமானவர் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள். தமிழ் மக்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் அவரது பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. சாட்சிகளற்று போர் என்ற பெயரில் இன அழிப்பு இடம் பெற்ற காலத்தில் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் சாட்சியாகவும் , துயரங்களைச் சுமக்கும் மக்களின் சுயாதீன குரலாகவும் ஆண்டகை விளங்கினார்.

போரில் இறந்த மக்களின் எண்ணிக்கையை ஐ.நா. நிபுணர் குழு 40,000 எனக் குறிப்பிட்டிருந்த நிலையில் 146,679 பேர் இறுதி யுத்தத்தின் காணாமல் ஆக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் ஆதாரத்துடன் உரத்துக் கூறினார்.

2019ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியல் கேள்விக்குறியான நிலையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தமிழ் மக்களினுடைய கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு தமிழ் தேசிய அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதே சரியானது என்ற உறுதியான தீர்மானத்தை எடுத்தார்.

இது பற்றிக் கருத்துருவாக்கம் செய்து இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தமிழ் சிவில் சமூக அமையம் உருவாக்கப்பட்ட போது அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்கு முறைக்கு முகம் கொடுக்க வேண்டுமானால் பலமான நிலையில் இருக்க வேண்டும்.

அதற்கு தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் பொது அமைப்புக்களும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் எனக் கருதினார்.

அத்துடன் அதற்காக அரும்பாடுபட்டார். இலங்கைத்தீவில் நடைபெற்றது இன அழிப்புதான் என்றும் அதற்கு இலங்கை அரசே முழுப்பொறுப்பு என்றும் இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்று தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் உரக்கக் குரல் எழுப்பினார்.

இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தமிழ் அரசியல் வரலாற்றிலும் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலும் மறக்க முடியாத மிகப் பெரும் ஆளுமை. ஆன்மீகத்தலைவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷர்.

சத்திய இலட்சியத்தினை வாழ்வாக வரித்துக்கொண்ட மகத்தான மனிதர்களை சாவு அழித்தது கிடையாது. இவ் உலகப்பந்தில் இறுதித் தமிழன் உயிர்வாழும் வரை ஆண்டகையின் நினைவை அழித்து விடமுடியாது. அந்தவகையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் ஓர் அடையாளமாக என்றும் தமிழ் மக்களின் மனங்களில் உயிர் வாழ்வார்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் கத்தோலிக்க மக்கள் மற்றும் உலகளவில் பரந்து வாழும் தமிழ்மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அன்னாரினது புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பெரும் பாக்கியம் கிட்டாததையிட்டு ஏமாற்றமடைகின்றேன். அவரது இலட்சியத்தை வென்றெடுப்பதே தமிழ் மக்கள் ஆண்டகைக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும் - என்றுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி