முத்தையன்கட்டு இளைஞன் படுகொலை : 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 இராணுவத்தினரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் (19.08.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து விளக்கமறியல்
குறித்த வழக்கு தொடர்பாக மூன்று இராணுவத்தினர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினமும் (18) சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் நால்வரும் இன்றையதினம் (19.08.2025) முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அணிவகுப்புடன் ஆரம்பமான குறித்த வழக்கு விசாரணையானது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகளான கெங்காதரன் ,சுபா தனஞ்சயன் மற்றும் ஏனைய சடட்டத்தரணி குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்திற்கு பிணை வழங்க கூடாது என வாதிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து சந்தேக நபர் நால்வரையும் 26.08.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தவிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
