மற்றொரு நோயாளியின் மரணம் - நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பி பயன்பாட்டிற்கு தற்காலிகமாக தடை
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டை நிறுத்த சுகாதார அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி உடலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சையின் பின்னர் வழங்கப்பட்ட மருந்துகளின் ஒவ்வாமையின் விளைவால் குறித்த நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.
மருந்து ஒவ்வாமை

இருப்பினும், சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பி மருந்துக்கு ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாகவே நோயாளி உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுகாதாரத்துறை மீதும் மருத்துவமனைகள் மற்றும் மருந்துகள் மீதும் மக்களுக்கு இருக்கும் அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இப்படி மருத்துவ பிழைகள் தொடர்வது நாட்டை சுடுகாடு ஆக்கும் வழியே அன்றி வேறென்ன என்று சொல்ல முடியும்.