இந்தியாவில் 33 குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் : தம்பதிக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை
03 வயது குழந்தை உட்பட33 குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள்
குற்றம் சாட்டப்பட்ட ராம்பவனும் அவரது மனைவி துர்காவதியும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள்.

இயற்கைக்கு மாறான குற்றங்கள், தீவிரமான ஊடுருவல் பாலியல் குற்றங்கள், குழந்தை ஆபாசம் மற்றும் குற்றவியல் சதி ஆகியவை இதில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் காணப்படும் எந்தவொரு பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாகப் பிரிக்க வேண்டும்.
குற்றவாளிகளான ராம்பவனும் அவரது மனைவி துர்காவதியும் 2010 மற்றும் 2020 க்கு இடையில் இந்தக் குற்றங்களைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
நீர்ப்பாசனத் துறையில் இளநிலை பொறியியலாளர்
ராம்பவன் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை பொறியியலாளராக பணியாற்றினார், மேலும் அவர் குழந்தைகளை ஈர்க்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இணையவழி காணொளி கேம்களை அணுகுவது, குழந்தைகளை ஈர்க்க பணம் மற்றும் பரிசுகளை வழங்குவது போன்ற தந்திரோபாயங்களை அவர்கள் பயன்படுத்தினர்.
மத்திய புலனாய்வுத் துறை பெப்ரவரி 2021 இல் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |