வெளிநாடொன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள்
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரிற்கு கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளதோடு இந்த தகவலை மேலும் உறுதி செய்துள்ளது.
அதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பிணை மனுக்கள் பல முறை மறுக்கப்பட்டுள்ளதுடன் கத்தார் அதிகாரிகளால் அவர்களின் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
மேலும், கத்தாரின் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று(26) அவர்களுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனமான தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் முன்னாள் கடற்படை வீரர்கள் பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம், இந்த தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.