ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மரணம் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை
அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களையும் கொன்று காசாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்துள்ளார்.
'காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே வேறுபாடு இல்லை. உலகம் ஐ.எஸ்.ஐ அழித்தது போல் ஹமாஸ் அமைப்பை நாமும் அழிப்போம்.
அனைவருக்கும் மரணம்
அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களும் இறக்க வேண்டும்' என இஸ்ரேல் பிரதமர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறினார்.
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் பிரதமர் நெதன்யாகு இவ்வாறு தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று ஐக்கிய அரசு நம்புகிறது.
போருக்காக அமைக்கப்பட்ட ஐக்கிய அரசு
எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான பென்னி காண்ட்ஸ் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் பங்கேற்புடன் பிரதமர் நெதன்யாகு இந்த புதிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்துள்ளார்.