ஆற்றில் மூழ்கி க.பொ.த சாதாரண தர மாணவன் பலி!!
மூதூரில் 16 வயது இளைஞன் ஒருவர் ஆற்றில் மூழ்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஜின்னா நகர் மூதூர் - 02 ஐச் சேர்ந்த க.பொ.த சாதாரண தர மாணவனான நஜீப் அதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் அவரது நண்பர்களுடன் ஆலிம்சேனை எனப்படும் இடத்திலுள்ள ஆறு ஒன்றில் மதியம் 1 மணியளவில் குளிக்கச் சென்றவேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டு மூதூர் வைத்தியசாலைக்கு 3 மணியளவில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.வை.எம். லாபிர் குறிப்பிட்டார்.
குறித்த மாணவனின் உடல் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் குடும்பத்தினரிடம் 7 மணியளவில் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த இடத்தில் குழிப்பதனை தடை விதிக்க வேண்டும் எனவும் பிரதேச சபைத் தவிசாளரிடம் வேண்டுகோள் ஒன்றினையும் மரணவிசாரணை அதிகாரி விடுத்துள்ளார்.