தமிழரசுக் கட்சியின் வழக்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Vavuniya M A Sumanthiran S. Sritharan ITAK
By Sathangani Jun 16, 2024 10:56 AM GMT
Report

தமிழரசுக் கட்சி (ITAK) தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (16) வவுனியாவில் (Vavuniya)அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்  இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்

தமிழரசுக் கட்சியின் வழக்கு

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்  ”இன்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் வழக்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Has Been Taken Regarding The Case Itak

கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழுபேருடன் கிளிநொச்சியை (Kilinochchi) சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.

அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அந்த ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) மற்றும் யோகேஸ்வரன் (Yogeswaran) சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார்.

நானும் அப்படி கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் யூலை 19 ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது. அந்த வகையில் கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்தியசெயற்குழு எடுத்த தீர்மானத்திற்கமைய வழக்கை முடிவுறுத்திக்கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன்.

சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு: பொது மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு: பொது மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

சிறீதரனின் நிலைப்பாடு

எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது அதில் பல படிமுறைகள் உள்ளது. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம்.

தமிழரசுக் கட்சியின் வழக்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Has Been Taken Regarding The Case Itak

சாதாரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்திற்கு பின்னரே முதலாவது விளக்கத்திற்கான திகதி குறிக்கப்படும். ஆனால் இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம்.

அன்றையதினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறீதரன் (Shritharan), குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னாரில் விவசாயிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்த அதிபர் ரணில்

மன்னாரில் விவசாயிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்த அதிபர் ரணில்

மீண்டும் கூடவுள்ள மத்தியகுழு 

இதனால் கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இருப்பினும் கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று சிறீதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன்.

தமிழரசுக் கட்சியின் வழக்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Has Been Taken Regarding The Case Itak

இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழுபேரும் எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒரு நிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டிற்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டிற்கு இணங்கிகொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வவுனியாவில் மத்தியகுழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைபை மத்தியசெயற்குழுவிற்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தை பெறவேண்டும்.

அதனை அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து அதன் பின்னர் எமது இணக்கப்பாட்டை செய்யலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம்“ என தெரிவித்தார்.

நெருங்கும் தேர்தல் : ரணிலுக்கு ஆரவளிக்க மறுக்கும் மொட்டு

நெருங்கும் தேர்தல் : ரணிலுக்கு ஆரவளிக்க மறுக்கும் மொட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026