கோழி இறைச்சி, மீன் விலை தொடர்பில் வெளியான தகவல்!
Government Of Sri Lanka
Sri Lanka Food Crisis
By Dharu
கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சந்தையில் நிலவும், கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, "தற்காலிகமான ஒன்று" என வர்த்தக அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்தது வருகின்றது.
கோழி இறைச்சியின் விலை
இந்நிலையில் கோழி இறைச்சியின் விலை அடுத்த சில வாரங்களில் குறையலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை இதுவரை அதிகரிக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்