பாடசாலை சேவை போக்குவரத்து கட்டணம் - வெளியான அறிவிப்பு
டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்,
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வை அடுத்து பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ள போதிலும், பெற்றோர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
டீசல் விலை
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

முடிந்தால் டீசல் விலையை ஒரு குறிப்பிட்ட தொகையாலாவது குறைத்துத் தருமாறு கேட்கிறோம்.
அவ்வாறு குறைக்கப்பட்டால், அந்த நிவாரணத்தை பெற்றோர்களுக்கு அப்படியே வழங்க எங்களால் முடியும்." எதிர்காலத்தில் டீசல் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதன் பலனை உடனடியாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |