அபகரிக்கப்பட்ட தமிழர் காணிகளை விடுவிக்க முடிவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 61 வீதமான பொது மக்களின் காணிகள் வன வள திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 11 ஆயிரம் ஹெக்ரெயர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பூர்வீகக் காணிகள் அபகரிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம் ,மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பூர்வீக காணிகள் பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
தொல்பொருள் திணைக்களத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தின் வசமுள்ள காணிகளை
குறித்த கலந்துரையாடலில் அதிபர் செயலகத்தின் பிரதிநிதி இளங்கோவன் , இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
