மண்ணெண்ணை பிரச்சினைக்கு நாளை தீர்க்கமான முடிவு
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு இன்று(08) அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்களை இன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார்.
மண்ணெண்ணை தட்டுப்பாடு

கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை நியாயமான விலையில் எப்படியாயினும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதுடன் மண்ணெண்ணையை இறக்குமதி செய்வதில் காணப்படும் சவால்களையும் தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து, அதிபர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகிய மூவரும் நாளை சந்தித்து கலந்துரையாடி, குறித்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.