பௌத்த மயமாகும் தமிழர் பகுதி: புனித ஸ்தலங்களாக பிரகடனம்
தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் பௌத்தமயமாக்கலுக்குள்ளாகி வரும் நான்கு இடங்கள் தேசிய புனித ஸ்தலங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான பத்திரங்களை வழங்கும் நிகழ்வு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பனாமுரே திலகவன்ஸ
இந்த நிகழ்வானது, கடந்த 15 ஆம் திகதி அதிபர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
பத்திரம் புல்மோட்டை அரிசி மலை பௌத்த பிக்குவான பனாமுரே திலகவன்ஸ, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து விகாரைகளை அமைத்து வருபவர்.
விகாரைகள்
இவரிடமே இந்த இடங்களுக்கான பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி குச்சவெளி பிரதேச செயலகத்தின் புல்மோட்டை பகுதியில் உள்ள சாந்தி விகாரை, யான் ஓயா விகாரை, புடைவைக்கட்டு சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம், புல்மோட்டை சிறி சத்தர்ம யுக்திக ஆசிரமம் ஆகிய நான்கு பௌத்த இடங்களும் அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை என்பன கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பௌத்த புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |