கொரோனா தடுப்பூசியின் வலுவைக் குறைக்கும் வைரஸ் பிறழ்வு
டெல்டா வைரஸ் பிறழ்வானது கொவிட் தடுப்பூசியின் வலுவை, வெகுவாக குறைப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர(Chandima Jeewandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கொவிட் 19 இன் இரண்டு தடுப்பூசி மருந்தளவுகளையும் (DOSE) செலுத்தி பின்னரான, மூன்று மாதங்களில், டெல்டா வைரஸ் பிறழ்வு, அந்த தடுப்பூசியின் வலுவை குறைக்கிறது.
அதேவேளை, தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து, டெல்டா வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் குறைவாகக் காணப்படுகிறது.
இதேவேளை, குறித்த ஆய்வானது, ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. மேலும் உறுதிப்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Latest: Transmission of COVID 19: People who receive two COVID-19 jabs and later contract Delta variant are less likely to infect close contacts than are unvaccinated people with Delta. but, the protective effect is small, declines alarmingly at 3 months after the 2nd shot.
— Chandima Jeewandara (@chandi2012) October 6, 2021