நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change Weather
By Sathangani Jan 08, 2026 10:06 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்படி நாளை மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகியவற்றுக்கு இடையில் இலங்கைக் கரையை ஊடறுத்துச் செல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 250 கி.மீ தொலைவில் இந்த தொகுதி நிலை கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கை

அதன்படி, கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர், இன்று (08) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு | Deep Depression 300 Km From Pottuvil Epicenter

அதேபோல், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காற்று வடகிழக்குத் திசையிலிருந்து வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு (35-45) கி.மீ அளவில் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (60-70) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் (2.5 – 3.5) மீற்றர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இந்தத் தாழமுக்கமானது தற்போது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியான பொத்துவிலுக்குத் தென்கிழக்கே சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தாழமுக்கம் கரையை நெருங்கி வருவதால், மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு | Deep Depression 300 Km From Pottuvil Epicenter

முதலாம் இணைப்பு

பொத்துவிலுக்கு 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழமான தாழமுக்கம்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இன்று (08) காலை ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வானிலைத் தொகுதி தற்போது பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 300 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன், அடுத்த சில மணித்தியாலங்களில் இது கிழக்குக் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதிகமான பலத்த மழை 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு | Deep Depression 300 Km From Pottuvil Epicenter

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் இதர கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாயம்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாயம்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: அரசாங்கத்தின் நிலைப்பாடு!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: அரசாங்கத்தின் நிலைப்பாடு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா

10 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உயரப்புலம், Jaffna, Mississauga, Canada

02 Jan, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், கொழும்பு, London, United Kingdom

22 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016