ஆளும் தரப்புக்கு கிடைத்த படுதோல்வி
budget
defeat
kataragama-pradeshiya-sabha
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள கதிர்காமம் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று (10) பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமையே இதற்குக் காரணம்.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 3 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி கதிர்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 10 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.