பால்மாவின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை குறைக்கப்படுகின்றது என இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது.
இந்த விலை குறைப்பு மார்ச் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்தமை காரணமாக பால்மாவின் விலையும் திடீரென அதிகரிக்கப்பட்டது.
விலை குறைப்பு
இதன் காரணமாக குழந்தைகளும், பாலூட்டும் தாய்மாரும் அதிகளவில் பாதிப்படைந்தனர். தற்போது முக்கிய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், மக்கள் அத்தியவசிய பொருட்களை இனிவரும் காலங்களில் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.