யாழில் விஷமிகள் செய்த நாச செயல் - பாரிய செலவில் அமைக்கப்பட்டவை எரிந்து நாசம் (படங்கள்)
Jaffna
By pavan
யாழில் சில விஷமிகளின் செயற்பட்டால் பாரிய பணச்செலவில் நடப்பட்ட நிழல் தரும் மரங்கள் தீயில் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் - மண்கும்பான் பொது நிர்வாக ஓய்வு விடுதி அருகிலே இன்று(01) இந்த நாச செயலை விஷமிகள் செய்துள்ளனர்.
மேய்ச்சல் தரவை புற்களை மாடுகளுக்கு உணவாக விடக்கூடாது என்பதற்காக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விசமிகளினாலேயே இந்த வேலை செய்யபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கண்டுகொள்ளாத அரச ஊழியர்கள்

மேலும், அருகில் அரச பொது நிர்வாக ஓய்வு விடுதி இருந்தும் அங்குள்ள அரச ஊழியர்கள் இதனை கண்டும் காணாமலிருப்பது வேதனையளிக்கிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.


6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி