வெளிநாட்டவர்களிடம் பெருந்தொகை மோசடி! சிக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள்
விடுமுறை நாட்களில் இலங்கைக்கு வந்திருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா காவல்துறையினருக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
ஒக்டோபர் 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பிரேசில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் தலா ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 வசூலிக்கப்பட்டு இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட 40 மற்றும் 48 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
