ரணிலை சந்தித்த உலக தமிழர் பேரவை (படங்கள்)
உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினர் (GTF) அதிபர் விக்ரமசிங்கவையும், இலங்கையின் முக்கிய பௌத்த தேரர்களையும் சந்தித்துள்ளனர்.
இதன் போது, "இமயமலைப் பிரகடனம்” பேரவையின் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கபட்டதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வரலாற்று தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவற்றை அடிப்படையாக கொண்டு சமூக நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் பன்மைத்துவ இலங்கையை மேம்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்குக்கு விஜயம்
இதனையடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, குறித்த குழுவினர் வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |