டெல்டா பிளஸ் கொரோனா திரிபு தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா திரிபை விட டெல்டா பிளஸ் கொரோனா திரிபானது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த டெல்டா பிளஸ் கொரோனா திரிபால் பிரித்தானியாவில் இதுவரையில் 6 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சீனாவில் கொரோனா பரவல் நிலைமை மீளவும் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த வாரத்தில் மாத்திரம் சீனாவின் 11 மாநிலங்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையில் தற்போது ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களை சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இன்னமும் கொரோனா தொற்றின் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.