மற்றுமொரு பேரிடியான செய்தி! 1,200 ரூபாவால் அதிகரிக்கப்படுமா எரிவாயு?
சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், லிட்ரோ நிறுவனத்தின் சேவையாளர்கள் அடங்கிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை தற்போது 800 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் கிரயம் 2,021 ரூபாவாகும். எனினும் விற்பனை விலை 1,493 ரூபாவாகும்.
கப்பலுக்கான கட்டணம், காப்பீட்டு தொகை உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக 700 ரூபா செலவாகின்றது.
இதற்கமைய எரிவாயுவின் விலை 1,200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 2,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
கடந்த 9 மாதங்களாகச் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காமையினால் நிறுவனத்துக்கு 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.