இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 49,000 ஆக உயர்வு
இலங்கை முழுவதும் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 49,000 ஆக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் இந்த அச்சுறுத்தலின் தீவிரத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஊடகங்களிடம் பேசிய தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கரா, நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வும் தீவிரப் பங்கேற்பும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் கவலையின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், டெங்கு செயல்பாட்டு அறை மூலம் 47 முறைப்பாட்டுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
டெங்கு பாதிப்பு
மேலும், 0117 966 366 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு டெங்கு பாதிப்புக்களை தெரியபடுத்தலாம் என கூறியுள்ளார்.

இந்த தொலைபேசி எண் வார நாட்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் முறைப்பாடுகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு தழுவிய மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் வியாழக்கிழமை (24) தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வரை தொடரவுள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் அதிகாரிகள் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிக அபாயம் உள்ள பகுதிகளைக் குறிவைத்து, ஒருங்கிணைந்த தூய்மைப்பணி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் இந்த முன்னெடுப்பு 600 கிராம அலுவலர் கோட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 மணி நேரம் முன்