பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்
Srilanka
Accident
Department of Irrigation
D Apesirivardhana
requested
By MKkamshan
நீர்நிலையின் ஆழம் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியாவிட்டால் மக்கள் நீரில் மூழ்கி இறக்க நேரிடும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் டி அபேசிறிவர்தன (D Apesirivardhana) தெரிவித்துள்ளார்.
அதேவேளை,ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீராடும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இயற்கையின் பல்வேறு காரணிகளால் அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர்களும் விபத்தை சந்திக்க நேரிடுவதாகவும் தெரிவித்தார்.
தற்போது பாதுகாப்பு அங்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை, இது ஆபத்தான சூழ்நிலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
படகு சவாரியின் போது பாதுகாப்பு அங்கிகளை அணிவது முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
